ஹூவாய் நிறுவனத்தின் துணை அமைப்பான ஹானர் பிராண்ட் நிறுவனம், மேஜிக்புக் புரோ என்கிற பெயரில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற லேப்டாப் அறிமுக நிகழ்ச்சியில், இது தொடர்பாக ஹூவாய் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ”8வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 அல்லது ஐ7 பிராசஸரைக் கொண்டுள்ளது. மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் எடை குறைவானதாகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் செயல்படக் கூடிய பேட்டரியை கொண்டுள்ளது. இது விண்டோஸ் 10 இயங்குதளம் உடையது. இதன் திரை 16.1 அங்குலமாகும். இதில் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி எஸ்.எஸ்.டி. உள்ளது.
இந்த லேப்டாப்பில் உள்ள காற்றாடி சிறப்பாக செயல்பட்டு லேப்டாப் எளிதில் சூடாவதைத் தடுக்கிறது. இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் மற்றும் 8 ஜி.பி ரேம், 512 ஜி.பி நினைவகம் கொண்ட மாடலின் விலை ரூ. 55 ஆயிரமாகும். கோர் ஐ7, 1 டி.பி நினைவக வசதி, 16 ஜி.பி ரேம் வசதி கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.80,100 ஆகும்” என்று ஹூவாய் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது.