ம்மு

ம்முவின் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு உண்டானதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார்  3800 மீட்டருக்கு மேல் மலையில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது.  இங்கு தானாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் வருகை தருகின்றனர்.    ஆண்டு தோறும் இந்த யாத்திரை சுமார் 2 மாதங்கள் மட்டும் நடந்து வருகிறது.

இந்த வருடம் ஜூன் 30 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி உள்ளது.  வரும் ஆகட் மாதம் 15 ஆம் தேதியுடன் இந்த யாத்திரை முடிவடைகிறது.   இந்த வருடம் இதுவரை சுமார் 3.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த புலிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.   தற்போது தரிசனத்துக்காக ஜம்மு மலை அடிவாரத்தில் ஏராளமானோர் காத்துக் கொண்டுள்ளனர்.

ஜம்மு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.  இந்த மழை காரணமாகப்  பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.   இதை அடுத்து மலைப் பாதையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.    இதையொட்டி ஜம்முவில் உள்ள பல்டெல் மற்றும் பகல்காம் தடங்களில் கடும் தடை உண்டாகி இருக்கிறது.  இதனால் பக்தர்கள் அந்த பாதைகளில் பயணம் செய்ய இயலாத நிலை உண்டாகி இருக்கிறது.

அதையொட்டி மலையடிவார முகாம்களில் தங்கி இருப்போர் மலையில் ஏற இன்று முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதிவரை தற்காலிக  தடை விதிக்கப்பட்டுள்ளது.    மழை காரணமாக பழுதடைந்த சாலைகளைச் செப்பனிடும் பணியில் மீட்புக் குழுவினரும் ராணுவ வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.