நியூயார்க்:

மெரிக்கா மற்றும் கனடாவில் பிரபலமாக செயல்பட்டு வரும் கேபிடல் ஒன் நிநி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சுமார்  100 மில்லியன் பேரின் தரவுகள் (Data)  திருடப்பட்டுள்ளதாக ‘கேபிடல் ஒன்’ என்னும் நிதி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில், தரவுகளை ஹேக் செய்த தாக சாப்ட்வர் வல்லுநரான இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேபிடல் ஒன் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளையும் அளித்து வருகிறது. அத்துடன்,  கிரெடிட் கார்ட், கடன்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை வழங்குகிறது.

இந்த நிலையில், கேபிடல் ஒன் நிறுவனம் வாடிக்கையாளர்கள் கிரிடிட் கார்ட் வாங்குவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள், அலைப்பேசி எண்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாக கேபிடல் ஒன் புகார் தெரிவித்துள்ளது. பெயர்கள், பிறந்த தேதி உட்பட கிரிடிட் ஸ்கோர்ஸ், அளவு, மீதமுள்ள தொகை, பொருட்களுக்கு பணம் செலுத்திய தகவல் மற்றும் தொடர்பு எண்ணங்கள் ஆகியவையும் திருடப்பட்டுள்ளதாம் ஆனால் ஹேக் செய்த நபருக்கு கிரெடிட் கார்ட் எண்கள் கிடைக்கவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் உள்கட்டமைப்பின் பாதுகாப்புத்தன்மையில் இருந்த குறைப்பாட்டை ஹேக் செய்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த தகவல் திருட்டால் அமெரிக்காவில் 100 மில்லியன் பேரும் கனடாவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்த திருட்டு, கடந்த (ஜூலை) 19ம் தேதியன்று கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மென் பொருள் வல்லுநரான 33 வயதான பைஜ் தாம்சன் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேக்கிங் பற்றி பெருமையாக பேசிய வந்த  பைஜ் தாம்சனை தொடர்ந்து கண்காணித்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். அவர்மீது கணினி மோசடி மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருமணமான தாம்ஸன் ஏற்கனவே அமேஷான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தில் வேலை செய்தவர். பின்னர், சியாட்டில் வேரெஸ் கிடீஸ் என்று அழைக்கப்படும் ஒரு சமூக வலைதளக் குழுவின் அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.