சென்னை:

மிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில்,, பல் மருத்துவப் படிப்பில்  காலியாக உள்ள இடங்களுக்கு மேலும் 3 நாள் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 150எம்.பி.பிஎஸ் மருத்துவப் படிப்புக்கான  திருப்பி வழங்கப்பட்டு உள்ளது. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. பல் மருத்துவத்திற்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டின் படி தனியார் கல்லூரிகளில் 852 மருத்துவ இடங்களும், 690 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பொதுக் கலந்தாய்வு தொடங்கிய 3 நாள்களில் சென்னை  உள்பட 24 அரசு மருத்துவக் கல்லூரி களிலும் உள்ள பி.சி, ஓ.சி, இடங்கள் முழுவதும் நிரம்பி விட்டன. அதுபோல சென்னையில் உள்ள ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களும் நிரம்பிவிட்டனர்.  அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், பல் மருத்துவத்தில் மட்டுமே சுமார் . 1000 இடங்கள் காலியாகவே உள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மாணவர்கள் சேர்க்கை யின்றி காலியாக இருந்த 150 இடங்கள் தமிழகத்திற்கு திருப்பி வழங்கப்பட்டு உள்ளது. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாநிலமும் 15% எம்.பி.பி.எஸ் இடங்களை அரசு நடத்தும் கல்லூரிகளில் நாடு முழுவதும் இருந்து மாணவர்களைச் சேர்ப்பதற்காக  ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீடாக  ஆண்டு  550 க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் நடைபெற்ற முதல்சுற்று மருத்துவ கலந்தாய்வில், அகில இந்திய ஒதுக்கீட்டில்  30%  மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். ஜூலை 25 ஆம் தேதி முடிவடைந்த இரண்டாவது சுற்று கலந்தாய்வை தொடர்ந்து, 25% இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.   இந்த இடங்கள் அனைத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதாகவும், இந்த இடங்களை நிரம்பும் வகையில் மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தேர்வுக் குழு செயலாளர் ஜி செல்வராஜன் கூறி உள்ளார்.

மேலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டு கலந்தாய்வில் தேர்வான மாணவர்கள், சேர்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் படி,    தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.