
சென்னை:
இன்று தமிழகத்தின் துக்க நாள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் டிவிட் பதிவிட்டு உள்ளர்.
மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதிவி ஏற்றது முதல் முத்தலாக், என்ஐஏ,ஆர்டிஐ போன்ற பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில், அணை பாதுகாப்பு மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.
தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கு உரிய பல அணைகள் அண்டை மாநிலங்களின் நிலப்பகுதியில் உள்ளதால், இந்த மசோதா தாக்கல் செய்தால் தமிழகத்தின் உரிமை பறிக்கப்படுவது மட்டுமின்றி, தமிழகம் பாலைவணமாகி விடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அணை பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்படும் இன்றைய நாள், தமிழ்நாட்டுக்கு துக்கநாள் என்று ரவிக்குமார் டிவிட் பதிவிட்டு உள்ளார்.
மேலும், இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டால், அறிமுக நிலையிலேயே எதிர்க்குமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் கோருகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.