டில்லி:
இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி தகவல் வெளியிட்டு உள்ளது. அதிகப்பட்சமாக உ.பி.யில் மட்டும் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த போலி பல்கலைக்கழகங்கள் 8 மாநிலங்களில் செயல்பட்டு வருவதாகவும், இந்த பல்கலைக்கழகங்கள் குறித்த மாணவர்கள் தெரிந்துகொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலாளர் ரஜினிஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூறியதாவது,
போலி பல்கலைக்கழகங்கள் குறித்து யுஜிசி ஆய்வு நடத்தியதாகவும், இதில், விதிகளை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது என்று கூறி உள்ளார். தற்போதைய நிலைய, நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அரசின் அங்கீகாரம் இல்லாமல் போலியாக செயல்பட்டு வருவதாகவும், இந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
அதிகப்பட்சமாக பாஜக ஆட்சி செய்து வரும் உ.பி.யில் மட்டும் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அடுத்ததாக டில்லியில் 7 பல்கலைக்கழகங்களும், மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் தலா 2 பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும், கேரளா, கர்நாடகா, மராட்டியம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு அங்கீகாரமற்ற பல்கலைக்கழகம் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்: