தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, காவிரியில் இருந்து உபரி நீரோடு, கூடுதல் நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது மழை தொடர்ந்தாலும், நீர்மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை கர்நாடக அரசு குறைத்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 1,000 கன அடி குறைந்து 8,000 கன அடியாக திறக்கப்படுகிறது. தற்போது கபினியில் இருந்து 5,000 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3,000 கனஅடி நீரும் திறப்பு.
தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாக, ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.