அலிகார்
அலிகாரில் உள்ள சாச்சா நேரு மதரசாவின் உள்ளே கோவில் மற்றும் மசூதி ஆகிய இரண்டும் அமைக்கப்பட உள்ளன.

அலிகார் நகரில் உள்ள சாச்சா நேரு மதரஸா என்னும் பள்ளி கடந்த 1999 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. ஆங்கில வழி பாடதிட்டத்தில் நடைபெறும் இந்த பள்ளியில் சுமார் 4000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியில் அனைத்து மதத்தை சேர்ந்த குழந்தைகளும் கல்வி பயில்கின்றனர். இவர்கள் பலர் சிறப்பு கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள் ஆவார்கள்.
இந்த பள்ளியை நடத்தி வ்ரும் சல்மா அன்சாரி முன்னாள் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரியின் மனைவி ஆவார். அவர் இந்த மதரசாவின் உள்ளே ஒரு கோவில் மற்றும் மசூதி ஆகிய இரண்டையும் கட்ட உத்தேசித்துள்ளார். மதரஸா என்பது இஸ்லாமிய பள்ளி என்னும் நிலையில் அதில் இந்து மாணவர்களை சேர்ப்பதும் அவர்களுக்காக கோவில் அமைப்பதும் ஆச்சரியமான ஒன்றாகும்.
இது குறித்து சல்மா அன்சாரி, “எங்கள் பள்ளியில் 4 வயது முதலான குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இந்த குழந்தைகளில் பலர் சிறப்பு கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள் ஆவார்கள். இவர்கள் பல மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை நாங்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரார்த்தனைக்காக வெளியில் அழைத்துச் சென்று வந்தோம்.
ஆபால் தற்போது பெருகி வரும் வன்முறை நிகழ்வுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே நாங்கள் இந்த குழந்தைகளின் வசதிக்காக பிரார்த்தனை அறையை அமைத்துள்ளோம். அது இடம் பற்றாக்குறையாக உள்ளதால் மதரசாவின் வளாகத்தினுள் கோவில் மற்றும் மசூதி ஆகிய இரண்டையும் விரைவில் அமைக்க உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டரில்பாராட்டு தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]