நாமக்கல்:
நாமக்கல் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் சிக்கியது.
தமிழகத்தில் பல இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று திர ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி திருப்பூர் அவிநாசி திருச்சி மாவட்டம் நாமக்கல் மாவட்டம் போன்ற இடத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
நாமக்கல்லில் மோகனூர் சாலையில் தாலுகா அலுவலகம் பின்புறத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய் குமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது.
அதைத்தொடர்ந்து, கணக்கில் வராத சுமார் ரூ.41 ஆயிரம் பணம் அங்கிருந்து கைப்பற்றப்பட்டது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.