
‘24’ படத்தில் மூன்று வேடங்களில் வந்த சூர்யாவின் ஒரு கதாபாத்திரம் வில்லனாக இருந்தது , அதை தொடர்ந்து தற்போது காப்பான் படத்திலும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வில்லன் கதாபாத்திரம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கும் இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர் .இதில் சூர்யா உளவுத்துறை அதிகாரியாகவும், மோகன்லால் பிரதம மந்திரியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.
படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் உள்ள இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் நல்லவர் போல் இருந்தாலும் அதில் வில்லத்தனம் இருக்கும் என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel