[embedyt] https://www.youtube.com/watch?v=byC8srHOOuo[/embedyt]

‘வாகை சூடவா’படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் தன கால் தடம் பதித்துள்ளார்.

‘பரோல்’ மற்றும் ‘பெண்களில்ல’ ஆகிய மலையாள படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகையாக 2018ஆம் வருடத்திற்கான ‘கேரளா ஃபிலிம் கிரிட்டிக்’ விருதைப் பெற்றுள்ளார் இனியா. பரோல் படத்தில் நடித்ததற்காக 2018 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான ‘பிரேம் நசீர் பவுண்டேஷன்’ விருதையும் பெற்றுள்ளார்

இந்நிலையில் இசை மற்றும் நடனம் மீது தீராத காதல் கொண்ட இனியா ‘மியா’ என்னும் வீடியோ இசை ஆல்பத்தை ‘அமையா என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தின் மூலம் தானே சொந்தமாக தயாரித்துள்ளார் . இந்த பாடலை டீம் மியா குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

‘Lets dance’ என்கிற சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்ள திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தைக் கற்றுக் கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான்.. இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார்.

இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான Divo மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா.