[embedyt] https://www.youtube.com/watch?v=I94Bs9BSg90[/embedyt]
பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உருவாகியுள்ள படம் ‘சாஹோ’. சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.
ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் ‘சாஹோ’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘காதல் சைக்கோ’ வீடியோ வெளியாகியுள்ளது. துவனி பனுஷாலி, அனிருத், தனிஷ் ஆகியோர் தமிழில் இப்பாடலை பாடியுள்ளனர். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட்.15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.