[embedyt] https://www.youtube.com/watch?v=Qnvu9i6dCeA[/embedyt]
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் நாள், சேலத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு, மர்ம நபர்கள் 5.75 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதை மையமாக வைத்து த்ரில்லர் அம்சத்துடன் அசுரகுரு உருவாகியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் ராஜ்தீப் என்பவர் இயக்கியுள்ளார். மகிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்க யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரலரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், விக்ரம் பிரபு கொள்ளையனாக நடிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.