ராம்பூர்
பாஜக தலைவரும் முன்னாள் நடிகையுமான ஜெயப்ரதா மாணவர்களுக்கு ஆங்கிலத்தை தவறாக சொல்லித் தரும் வீடியோ வைரலாகி வருகிறது

முன்னாள் பாலிவுட் பிரபலமான ஜெயப்ரதா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் இவர் உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தனது தேர்தல் பிரசாரத்தின் போது உத்திரப் பிரதேச முதல்வர் யோகி அமைத்துள்ள பள்ளி செல்வோம் திட்டத்தை விளம்பரம் செய்ய ஜெயப்ரதா ராம்பூர் பள்ளிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜெயப்ரதா அங்குள்ள குழந்தைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்துள்ளார். அவர் இந்தியில் பிழை இன்றி கற்பித்துள்ளார். ஆனால் ஆங்கிலத்தில் இந்தியா எனது நாடு என்பதை எப்படி சொல்ல வேண்டும் எனபதை எழுதிக் காட்டி உள்ளார். அப்போது அவர் எழுத்துப் பிழையுடன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.
ஜெயப்ரதா ஆங்கிலத்தில் “INDIA IS MY COUNTRY” என எழுதுவதற்கு பதில் “INDIA IS MY CONTRY” என எழுதி உள்ளார். அந்த இடத்தில் ஒரு சில ஆசிரியர்களும் இருந்துள்ளனர். ஆனால் அவர்களும் ஜெயப்ரதாவை திருத்தவில்லை. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெயப்ரதாவின் ஆங்கிலத்தை பலரும் கேலி செய்கின்றனர்.
[youtube https://www.youtube.com/watch?v=S60k-ZJcrvk]
[youtube-feed feed=1]