புதுடெல்லி:
தொழிற்சாலைகளில் தண்ணீர் தணிக்கை முறையை கொண்டு வரும் வகையில் புதிய கொள்கையை மத்திய அரசு வகுக்கவுள்ளது.
நிலக்கரி, இரும்பு,சிமென்ட் மற்றும் மின் உற்பத்தி துறைகளில் தண்ணீர் தணிக்கை முறையை முதல் கட்டமாக செயல்படுத்த மத்திய நீர் சக்தித் துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறும்போது, தண்ணீரை தணிக்கை செய்வது குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பயன்படுத்தப்படுகிறது என்ற தெளிவான விவரம் நமக்கு தேவை. தங்களது ஆண்டறிக்கையில் எவ்வளவு தண்ணீரை பயன்படுத்துகிறோம் என்ற தகவலை தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
தற்போதைய தண்ணீர் பயன்பாட்டு அளவை கண்டறிந்தபின், ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தண்ணீர் பயன்பாட்டு அளவு நிர்ணயிக்கப்படும்.
நீர்வள நிபுணர் விஸ்வநாதனம் கூறும்போது, மின்சாரத்தை விட தண்ணீருக்கான ராயல்டி மிகக் குறைவு.
தண்ணீருக்கு சரியான விலையை நிர்ணயித்தால், தொழிற்சாலைகளில் அளவோடு தண்ணீரை பயன்படுத்துவர்.
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலை தண்ணீர் பயன்பாடு குறித்து ஆவணங்களை பராமரித்தாலும், அதில் ஒருங்கிணப்பு இல்லை என்றார்.
இதற்கிடையே, தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் தண்ணீரை, பாசனத்துக்குப் பயன்படுத்துவது குறித்து விவசாயத்துறை அமைச்சகத்திடம் நீர்வளத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சீனா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைப் போல், இந்தியாவும் தண்ணீரை 3 முறை பயன்படுத்துகிறது.
தண்ணீரை பயன்படுத்துவது குறித்த பிரச்சாரத்தை ஜுலை 1 முதல் நீர் சக்தித் துறை தொடங்கியுள்ளது.