டில்லி
பணியின் போது காயமடைந்த ஊனமுற்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியத்தின் மீது வருமான வரி விதிக்கும் அரசு முடிவை இந்திய ராணுவம் எதிர்த்துள்ளது.
ராணுவ வீரர்கள் பலர் தங்கள் பணியின் போது காயமடைவதால் உடல் ஊனமுறும் அடைகின்றனர். கடந்த 1971 ஆம் வருடம் நடந்த போரில் மேஜர் ஜெனரல் கார்டோசோ அப்போது இளைஞராக இருந்தார். அவர் ஒரு கண்ணி வெடியை செயலிழக்க செய்யும் முயற்சியில் காயமடைந்து தந்து காலை இழந்தார். அதன் பிறகும் அவர் பணியை தொடர்ந்தார்.
அவருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது அவருடைய சேவைகளை பாராட்டி அப்போதைய நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சரவை புகழாரம் சூட்டி உள்ளது. ஆனால் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்ட போது அதில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. இவர் ஒரு உதாரணம் மட்டுமே ஆவார். பல ஊனமுற்றோருக்கு ஓய்வூதியங்களி ல் இவ்வாறு வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி சென்ற நாடாளுமன்றத்தில் பல முறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பல ஊனமுற்ற வீரர்கள் இதை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவம் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதை எதிர்த்துள்ளது.
ராணுவம் தனது பதிவில், “பல வருடங்களாக நாட்டின் பாதுகாப்புக்காக உழைத்த ஊனமுற ராணுவ வீரர்கள்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையில் வருமான வரி பிடித்தம் செய்வது தவறானது.
நாட்டின் பாதுகாப்புக்காக உடல் ஊனமுற்ற வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். இது அவர்களுக்கு நாம் செய்யும் கடமை மட்டும்ன்றி அவர்கள் வாழ்க்கை தரத்துக்கு உதவும் ஒரு செயலாகும்.
இவ்வாறு உடல் ஊனமுற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் வருமான வரி விலக்கு பெற்ற ஓய்வூதியமாக மாற்றப்பட இந்திய ராணுவம் ஆதரவு அளிக்கிறது. ஓய்வூதியத்துக்கு வரி விதிப்பதை ராணுவம் எதிர்க்கிறது.” என தெரிவித்துள்ளது.