ண்டன்

நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் 87 வயது மூதாட்டியான ரசிகையிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆசி பெற்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 40 ஆம் லீக் ஆட்டம் நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணியினர் மோதினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 314 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய அங்கதேச அணி 286 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி இந்த வெற்றியால் அரை இறுதிக்குள் நுழந்தது.

இந்த போட்டியை காண வந்தவர்களில் சாருலதா என்னும் மூதாட்டி பலரையும் கவர்ந்தார். 87 வயதான இவர் மூவர்ணக் கொடியை முகத்தில் வரைந்துக் கொண்டு தேசியக் கொடி பதிந்த சால்வியை கழுத்தில் அணிந்திருந்தார். தனது கையில் வைத்திருந்த பீப்பியை ஊதி இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் அளித்து வந்தார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டின் ரசிகை ஆவார்.

சாருலதா, “நான் ஆப்பிரிகாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த போதிலிருந்தே தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வருகிறேன். முன்பு டிவியில் ரசித்த நான் பணி ஓய்வுக்கு பிறகு நேரடியாக போட்டிகளை பார்த்து வருகிறேன். இம்முறை இந்தியா உலகக் கோப்பையை வெல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்த பிறகு சாருலதாவை நேரில் சந்தித்த இந்திய அணி தலைவர் விராட் கொலி மற்றும் ரோகித் சர்மா அவரிடம் ஆசி எற்றனர். மூதாட்டி சாருலதா தனது ஆசை முத்தங்களுட ஆசியை வழங்கினார். இந்த செய்தியை விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.