லாகூர்: பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவரான ரானா சனாவுல்லா, போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சியினுடைய பஞ்சாப் பிராந்திய தலைவராக இருக்கிறார். மேலும் இவர், நவாஸ் ஷெரீஃப் மற்றும் ஷெபாஸ் ஷெரீஃப் சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும்கூட.

இவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மிகவும் தீவிரமாக விமர்சிப்பவர். இம்ரான்கான் ஒரு போதைப்பொருள் அடிமை என்றும், அவரின் இஸ்லாமாபாத் வீட்டை சோதனை செய்தால், போதை வஸ்துகளை கைப்பற்றலாம் என்றும் சர்ச்சைக்குரிய முறையில் விமர்சித்து வந்தவர்.

ஆனால், ஃபைஸாலாபாத்திலிருந்து லாகூருக்கு சனாவுல்லா பயணம் செய்துகொண்டருந்தபோது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இவர், போதை மருந்து வைத்திருந்த குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அதேசமயம், சனாவுல்லா கான் கைதுசெய்யப்பட்டதற்கு பலதரப்பாரிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது ஒரு மோசமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த கைது நடவடிக்கையில் இம்ரான்கானுக்கு நேரடி தொடர்பிருப்பதாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மர்யம் நவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

[youtube-feed feed=1]