சென்னை:

மிழக சட்டமன்றத்தில், இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது ஸ்டாலின் குற்றச்சாட்டுக்குபதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசிசாமி,  திமுக பொய் வாக்குறுதிகள் கொடுத்து, வாக்காளர்களை முட்டாளாக்கி வெற்றி பெற்றது என்று கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று (ஜூலை 1ந்தேதி(  மீண்டும் கூடியது. அப்போது மறைந்த முன்னாள் உறுப்பினர் குமாரதாஸுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  தொடர்ந்த விவாதங்கள் நடைபெற்றது.

நேற்றைய கூட்டத்தில்,  வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் வெற்றி குறித்து விவாதம் தடம் புரண்டது. அப்போது, திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றதாக எடப்பாடி கூறினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், எங்களாலும் நிச்சயம் வெல்லமுடியும்’ என்று பேசினார்.

இதையடுத்து, எதை வைத்து அப்படி கூறினீர்கள் என்று ஸ்டாலின் முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். மேலும்,  திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்று வோம். திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘இதைத்தான் நெடுஞ்காலமாக கூறி வருகிறீர்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், எங்களாலும் நிச்சயம் வெல்லமுடியும்’ என்றார். இவ்வாறு காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது.