பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனந்த் சிங் பதவி விலகியதால் குமாரசாமி அரசுக்கு சிக்கல் உண்டாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினரின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிற்து. மஜத கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் அமைச்சரவை பங்கீடு குறித்து இரு கட்சிகளுக்கிடையே அதிருப்தி உண்டானது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் ஜார்கிஹோள்ளி ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்டோர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலயில் அவர்களை பாஜக தலைவர்கள் சந்தித்து தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அதனால் இரு சுயேச்சை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளித்து அந்த சலசலப்பை குமாரசாமி அடக்கினார். இன்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனந்த் சிங் பதவி விலகி உள்ளார். இவருடைய ராஜினாமா கடிதம் தமக்கு வரவில்லை என சபாநாயகர் ரமெஷ் குமார் மறுத்துல்ளார்.
ஆனால் ஆனந்த் சிங் தனது ராஜினாமாவை செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார். அத்துடன் இன்னும் சுமார் 5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலக தயராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனந்த் சிங் பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு மாறியவர் ஆவார். அவர் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிற்து.
ஆனந்த் சிங் பதவி விலகல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் கூறி உள்ளார். தற்போது இவருடைய ராஜினாமா குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளதாக குறப்படுகிறது. பாஜக அதிக இடங்களை பெற்ற போதும் பெரும்பான்மை இல்லாத்தால் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தகக்கது.