டில்லி:
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பாரதியஜனதா கட்சி எம்.பி.க்களின் கூட்டம் நாளை டில்லியில் நடைபெறும் என பாஜக தலைமை அறிவித்து உள்ளது.

17-வது மக்களவைக்கான தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கடந்த மாதம் 25ந்தேதி கூட்டியது. அன்றைய தினம் எதிர்பாராதவிதமாக ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மதன்லால் சைனி திடீரென்று மரணம் அடைந்ததால் அன்று நடைபெற இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை பாரதியஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
Patrikai.com official YouTube Channel