சென்னை:

மிழகத்தில் இன்று முதல் எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் போராட்டம் தொடங்கிய நிலையில், தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக  எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கைள் சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகள்  இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கோரி எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் அவசர தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் விசாரணையின்போது, சென்னை உயர்நீதி மன்றத்தின் வேண்டுகோளை ஏற்று, எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கத்தின்ர் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். அதைத்தொடர்ந்து  வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான  கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுவை தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கேஸ் கொண்டு செல்லப்படும் லாரிகள்  ஒப்பந்தம் தொடர்பாக எண்ணை நிறுவனங்களுக்கும் லாரி உரிமையாளர்கள் சங்ககத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதுவரை  5,540 எல்பிஜி உ லாரிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 4, 800 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே எண்ணை நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  இன்று முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.