சென்னை:
தமிழகத்தில் காலியாகும 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தை 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் 24ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
இந்த நிலையில், திமுக தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
திமுக கூட்டணி சார்பில், கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு ஒரு இடம் வைகோவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மற்ற 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை அறிவித்து உள்ளது.
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொதுச்செயலாளர் சண்முகம்,
வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோரது பெயரை திமுக தலைவைர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.