ஐதராபாத்:
மரம் நடும் விழாவின் போது, பெண் வனத்துறை அதிகாரியை தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏவின் தம்பி கைது செய்யப்பட்டார்.
தெலங்கானா அரசின் மரம் நடும் விழாவில் கலந்து கொள்ள, வனத்துறை அதிகாரி அனிதா சிர்பர் மண்டல் பகுதியில் உள்ள சரசலா கிராமத்துக்கு சென்றார்.
அங்கு இடத்தை தேர்வு செய்து செடிகளை நட்டார். இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தனியார் இடம் என கூறி முற்றுகையிட்டனர்.
இது குறித்து ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ கொனெரு கொன்னப்பாவின் தம்பி கொனெரு கிருஷ்ணா ராவிடம் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அவர் வன அதிகாரி வனிதாவை தடியால் தாக்கினார். அவரது தலையில் பலமுறை தாக்கினார்.
ட்ராக்டரில் ஏறி தப்பிக்க முயன்றபோதும், விரட்டிச் சென்று அனிதாவை தாக்கினார்.
அதேபோல், அனிதாவுடன் வந்த 20 வனத் துறையினரையும் அவர்கள் கடுமையாக தாக்கினர்.
இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில் கொனெரு கிருஷ்ணா ராவை போலீஸார் கைது செய்தனர்.
இவர் சமீபத்தில் கொமரம் பீம் அஷிபாபாத் ஜில்லா பரிஷத் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.