டில்லி:
தலைநகர் டில்லியை வாட்டி வதைத்து வரும் கடும் வெயில் காரணமாக, அங்குள்ள அரசு பள்ளிகளுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டித்து டில்லி மாநில துணை முதல்வர் சிசோடியா அறிவித்து உள்ளார்.
டில்லி நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக ஜூலை 1ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரசு பள்ளிகள் வரும் 8ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒரு வார விடுமறை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும்ம்தான். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும், அவர்களுக்கு வழக்கம் போல் நாளை வகுப்புகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதுவரை அதிகபட்ச வெப்பநிலையாக 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.