மங்களூர்:
மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தடம் மாறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திலிருந்து தப்பியது.
துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று மாலை 5.40 மணி அளவில் தரையிறங்கியது.
அப்போது ஓடுதளத்திலிருந்து திசை மாறி டாக்ஸிகள் செல்லும் பாதையில் சென்று புல்வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய தரப்பிலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விமானம் விரைவில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.