கடலூர்:

நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்றும், திமுக கூட்டணியின் வெற்றி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கடலூரில் நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியதாவது,

“திமுக கூட்டணி கொள்கை ரீதியாக அமைந்த கூட்டணி. நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம். இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும்.
தமிழகத்தில் நிலவுவது தண்ணீர் பஞ்சம் அல்ல என்றும், தண்ணீர் தட்டுப்பாடுதான் என்றும் ஒரு புதிய விளக்கத்தை மாநில அரசு கொடுத்திருக்கிறது. அப்படியென்றால், ஜோலார்பேட்டையிலிருந்து எதற்காக தண்ணீர் கொண்டுவர வேண்டும்?

சென்னை கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் சிக்கும் என்று ஏற்கனவே எச்சரித்தும் இந்த அரசு அலட்சியமாக இருந்துவிட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டா மாவட்ட விவசாயிகளை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம்” என்று பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின்.