ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வரும் என கூறி, அது தொடர்பான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தெற்கு ரயில்வேயில் ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை செயல்பாட்டிற்கு வருகிறது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில்களுக்கு கால அட்டவணையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரயில் எண் 16650 நாகர்கோவில் – மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து ஏற்கனவே அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்வது ஜூலை 1 முதல் அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும். ரயில் எண் 56316 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் ரயில் திருவனந்தபுரத்திற்கு ஏற்கனவே இரவு 8.15 மணிக்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தது இனி 8.20க்கு வந்து சேரும். ரயில் எண் 22627 திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திற்கு மாலை 3.25 மணிக்கு வந்து சேர்ந்தது, இனி 3.30 மணிக்கு வந்து சேரும்.
ரயில் எண் 16351 மும்பை சிஎஸ்எம்டி – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலுக்கு காலை 3.50 மணிக்கு வந்து சேர்ந்தது, இனி 3.40க்கு வந்து சேரும். ரயில் எண் 16339 மும்பை சிஎஸ்எம்டி – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலுக்கு 3.50 மணிக்கு வந்து சேர்ந்தது, இனி 3.40க்கு வந்து சேரும். ரயில் எண் 19578 ஜாம்நகர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு இரவு 10.20க்கு வந்து சேர்ந்தது இனி 10.10க்கு வந்து சேரும். ரயில் எண் 12642 ஹஸ்ரத் நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரிக்கு 7.50 மணிக்கு வந்து சேர்ந்தது, இனி 7.40க்கு வந்து சேரும்.
ரயில் எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் 16127 காலை 8.15 மணிக்கு புறப்படுவது இனி 8.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். 16723 சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 7.50 மணிக்கு புறப்படுவது இனி 8.10 மணிக்கு புறப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.