புதுடெல்லி: பல்வேறான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
அவற்றுள் சிட்டிஸன் சேவிங்ஸ் திட்டம், பப்ளிக் புராவிடன்ட் ஃப்ன்ட், கிஸான் விகாஸ் பத்திரம் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட பல திட்டங்கள் அடக்கம்.
ஐந்தாண்டு சீனியர் சிட்டிஸன் சேவிங்ஸ் திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.7% என்பதிலிருந்து 8.6% என்பதாகவும், ஐந்தாண்டு தேசிய சேமிப்பு சான்றிதழ் விலை 8% என்பதிலிருந்து 7.9% என்பதாகவும், பப்ளிக் புராவிடன்ட் ஃபன்ட் வட்டி விகிதம் 8% என்பதிலிருந்து 7.9% குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிஸான் விகாஸ் பத்திரம் தொடர்பான வட்டி விகிதமும் 7.7% என்பதிலிருந்து 7.6% என்பதாக குறைந்துள்ளது. இதுதவிர, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதமும் 8.5% என்பதிலிருந்து 8.4% என்பதாக குறைந்துள்ளது.