புதுடெல்லி:

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற முறைக்குள் ஓராண்டுக்குள் இணையுமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது:

ஏற்கனவே ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு முறைக்குள் இணைந்துள்ளன.

2020-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்குள் ஏனைய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்துக்குள் இணைய வேண்டும்

இந்தத் திட்டம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் புதிய முறையின்படி, இந்தியாவின் எந்த பகுதியிலும் ரேஷன் பொருட்களை ஏழைகள் பெற முடியும்.

இதன் மூலம் போலி ரேஷன்கார்டு கார்டுகளையும் களைய முடியும்.

பாயிண்ட் ஆப் சேல் முறையை தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட 11 மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றனர்.

இந்த மாநிலங்கள் மத்திய அரசின் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களை எளிதாக எல்லா ரேஷன் கடை களிலும் நிறுவலாம்.

மோடி அரசின் 100 நாள் திட்டத்தின் ஒரு ஒரு பகுதிதான், இந்த ஒரே இந்தியா ஒரே ரேஷன் கார்டு திட்டம்.

கடந்த 2016 – ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் 80 கோடி மக்களுக்கு அதிகபட்ச மானியத்துடன் ஒரு கிலோவுக்கு ரூ. 1 முதல் ரூ. 3 வரை உணவு தானியங்கள் கிடைக்கும் என்றார்.