லண்டன்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் புதிய காவி நிற சீருடை அணிந்து விளையாட உள்ளது. இந்த நிலையில், புதிய காவி நிற சீருடை மிகவும் நன்றாக உள்ளது, தனக்கு பிடித்துள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்து உள்ளார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி தனது அதிரடி ஆட்டங்கள் மூலம் முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை சந்தித்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் தலா ஒரு புள்ளிகள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் பலம்மிக்க இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா நாளை களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
நாளை இங்கிலாந்துக்கு எதிராக மோதும் போட்டியின்போது, இந்திய அணியின் சீருடை மாற்றப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 75 சதவிகிதம் காவி நிறத்துடன் முன்பகுதி மட்டும் அடர்ந்த நீல நிறத்துடன் காணப்படும் புதிய ஜெர்ஜி அணிந்து நாளை இந்திய வீரர்கள் களமிறங்க தயாராகி வருகின்றனர்.
இதுவரை புளு கலரிலான ஜெர்சி சீருடை அணிந்து விளையாடி வந்த இந்திய அணி, முதன்முறை யாக காவி நிறத்திலான சீருடை அணிவதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நாளைய இங்கிலாந்துடன் மோதப்போகும் போட்டியில் புதிய சீருடை அணிந்து விளையாட முடிவு செய்துள்ளது .
ஆனால், இந்த புதிய சீருடை அழகாக இருப்பதாகவும், தனக்கு இந்த கலர் பிடித்திருப்பதாகவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்து உள்ளார். இது ஒரு நல்ல மாற்றம் என்று கூறியுள்ள கோலி, ஒரு ஆட்டத்துக்கு இன்று நன்றாக உள்ளது என்றவர், நிரந்தரமாக இந்த மாற்றத்துக்கு செல்வோம் என்ற என்று நான் நினைக்கவில்லை என்று கூறி உள்ளார்.
நீலம் தான் எங்களுடைய நிறம் என்று தெரிவித்த கோலி, அதை அணிவதில் தாங்கள் பெருமை கொள்வதாகவும், தற்போதைய சந்தர்ப்பத்தில் இது ஒரு ஸ்மார்ட் கிட் என்று கூறி உள்ளார்.