சென்னை:
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டு தடுக்க மழை நீர் சேகரிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் பிரச்சனையை தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு சமாளித்து வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தவிர்க்க நடிகர் ரஜினிகாந்த் யோசனை கூறியுள்ளார்.
‘தர்பார்’ படப்பிடிப்பில் கலந்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன் என்றும், ரசிகர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள், ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விஷயம் என்றவர், இது போன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருவதாகவும், இப்போதுதான் எல்லோருக் கும் தெரிய தொடங்கியிருக்கிறது என்றார்.
மேலும், தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும உள்ள நீர்நிலைகளை உடனடியாக தூர் வாரவேண்டும் என்றவர், மழைக்கு முன்பு அவற்றை சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நதி நீர் இணைப்பு குறித்த கேள்விக்கு, பாஜக அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள் என்று நம்பவுதாகவும், நடிகர் சங்க தேர்தலில் வாக்குசீட்டு உரிய நேரத்தில் எனக்கு கிடைக்கவில்லை. வாக்களிக்காதது எனக்கு வருத்தமாகதான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.