மும்பை

ன்று பெய்து வரும் கனமழையால் மும்பை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுளது.

வருடந்தோறும் ஜூன் மாதம் 10 ஆம் தேதிக்கு முன்பு மும்பையில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கும். இந்த ஆண்டு மிகவும் தாமதமாக பருவமழை தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய மழை கன மழை ஆகி உள்ளது.

குர்லா, தானே போன்ற பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. காலை வேளையில் மழை தொடர்ந்ததால் கல்லூரி, பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் ஊழியர்களும் பாதிப்பு அடைந்தன்ர்.

நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு மிகவும் கடுமையாக இருந்தது. இது மக்களுக்கு மேலும் பிரச்சினை அளித்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் இவ்வாறு தாமதமாக ஆரம்பித்த பருவமழை இன்னும் 4 நாட்களில் மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.