வாஷிங்டன்

ந்தியாவை ஐநா பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மொத்தம் 193 நாடுகள் இடம் பெற்றுள்ள ஐநா பாதுகாப்ப் குழுவில் ரஷ்யா, அமெரிக்கா,பிரிட்டன், சீனா மற்றும் பிரான்ஸ்  நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.   இதைத் தவிர 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராக உள்ளன.   இந்த குழுவில் 2 ஆன்டு பதவிக்காலத்துக்கு ஒவ்வொரு வருடமும் 5 தற்காலிக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்திய பல ஆண்டுகளாக ஐநா பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினராக முயற்சி எடுத்து வருகிறது.   அத்துடன் இந்த குழுவில் சீர்திருத்தம் கொண்டு வரவும் இந்தியா வலியுறுத்தி வருகிறது  வரும் 2021-22 ஆம் ஆண்டுக்கன உறுப்பினர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது.   அதில் இந்தியா போட்டி இடுகிறது.   ஐ நா பாதுகாப்பு குழுவில் இந்தியாவுக்கு 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

ஐ நா சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதி சையத் அக்பருதின், “ஐ நா பாதுகாப்பு குழுவில் இந்தியாவை தற்காலிக உறுப்பினராக இணைகக் ஆசிய  பசிபிக் குழுமத்தில் உள்ள அனைத்து 55 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன.  அதற்காக இந்தியாவின் சார்பில் இந்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிவித்துள்ளார்.

இந்த ஆசிய பசிபிக் நாடுகளில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், சீனா, இந்தோனேஷியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.