சென்னை:
தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில் அன்றைய தினம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வமும் அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழக சட்டப்பேரவையில் 2019- 20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது! இதைமுன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழகத்தில் ஜூன் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30க்கு கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது
இந்தக் கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் (ஜூன் 28ந்தேதி) திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.