ஷோபியன்:

தன் காரில் பயணித்த குடும்பத்தினர் தவறவிட்ட பணம்,நகையை அவர்களிடமே ஒப்படைத்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார் காஷ்மீர் ஓட்டுநர்.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து காஷ்மீருக்கு ஒரு குடும்பம் சுற்றுலா வந்தது.
பல இடங்களில் சுற்றிப் பார்த்த அவர்கள், அஹர்பால் நீர்வீழ்ச்சியை காண சுமோ கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர்.

அவர்களை நீர்வீழ்ச்சியில் இறக்கிவிட்டு திரும்பிய ஓட்டுநர் தாரிக் அகமது, பின் இருக்கையில் பை ஒன்று இருப்பதைப் பார்த்தார்.

அதை திறந்து பார்த்தபோது, ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளும், பணமும் இருந்தது.

செய்வதறியாது திகைத்து நின்ற அவர், அந்த குடும்பத்தினரை தேடி மீண்டும் நீர்வீழ்ச்சிக்கு வந்தார்.
ஆனால் அவர்கள் அங்கு இல்லை. எனினும் பல இடங்களில் தேடி ஒரு வழியாக அவர்களைக் கண்டுபிடித்தார்.
பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆழ்ந்த அவர்கள், ஓட்டுநரின் நேர்மையை பாராட்டியதோடு, நன்றி தெரிவித்தனர்.