டில்லி
கடந்த வருடம் உபரி வருமான வரி செலுத்தியவர்களுக்கு ரூ.64700 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டோர் வருமான வரி கணக்குகளை அளிக்கும் போது தங்கள் மொத்த வருமானத்தை கணக்கிட்டு அதில் கொடுக்கப்படும் சலுகைகளை கழித்து நிகர வருமானத்தை அளிப்பார்கள். அதற்கான வரி அவர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட அல்லது அவர்கள் செலுத்திய அட்வான்ஸ் வருமான வரித் தொகை அதிகமாக இருந்தால் அந்த தொகை வரி செலுத்தியோருக்கு திரும்ப அளிக்கப்படுவது வழக்கமாகும்.
மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ”கடந்த வருடம் மொத்தமாக 6.49 கோடி பேர் கணக்கு அளித்துள்ளனர். இது சென்ற வருடம் அளிக்கப்பட்ட 5.47 கோடி கணக்குகளை விட இது 18.65% அதிகமாகும். இவ்வாறு கணக்கு அளித்தவர்கள் செலுத்தி உள்ள உபரி வருமான வரியை உடனடியாக திருப்பி அளிக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது
வருமான வரி கணக்குகளில் 0.5% கணக்குகள் மட்டுமே முழு சோதனை செய்யப்பட உள்ளது. பெரும்பாலான கணக்குகளில் சந்தேகம் இல்லாததால் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உபரி வரி செலுத்தியோருக்கு அதை திருப்பி அனுப்ப ரூ.1.61 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஏப்ரல் 1 முதல் ஜூன் 18 வரை அதில் ரூ.64700 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.