புதுடெல்லி:

குஜராத்திலிருந்து ராஜ்யசபை தேர்தலில் போட்டியிட, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.


வெளியுறவுத்துறை செயலராக நீண்ட அனுபவம் பெற்றவர் ஜெய்சங்கர். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், பல்வேறு நாடுகளில் பணியாற்றியிருக்கிறார். அதனால், வெளிநாடுகளை அவரால் எளிதாக அணுக முடிந்தது.

இந்நிலையில், பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்தது. யாரும் எதிர்பாராத வகையில் வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஜெய்சங்கரை பிரதமர் மோடி, அதே துறைக்கு அமைச்சராக்கினார்.

எந்த அவையிலும் உறுப்பினர் இல்லாத அவர் 6 மாதங்களுக்குள் மக்களவையில் போட்டியிட்டோ அல்லது ராஜ்யசபை உறுப்பினராகவோ ஆக வேண்டும்.

இந்நிலையில், குஜராத்தில் ராஜ்யசபைக்கு நடக்கும் இடைத் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் போட்டியிடுகிறார்.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் குஜராத் தலைமை செயலகத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.