மும்பை:
மகாராஷ்ட்ராவில் கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்ட்ர சட்டப் பேரவையில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புத் துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில்,கடந்த 3 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாவட்ட அளவிலான கமிட்டிகள் பரீசீலனைக்குப் பிறகு, அரசு உதவி பெற இதில் 6,888 பேரது குடும்பத்தினர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டது.
இவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இதில் 192 பேரது குடும்பத்தினர் அரசு உதவி பெற தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.