சென்னை
வரும் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் அக்கறை செலுத்தாமல் உள்ளது.
சென்னை நகருக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக ரெட் ஹில்ஸ், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி நீர் தேக்கங்கள் அமைந்துள்ளன. இந்த நீர் தேக்கங்களின் கொள்ளளவை அதிகப்படுத்துவதன் மழைக்காலத்தில் நீர் சேமிப்பு அதிகரித்து அதன மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதை ஒட்டி கடந்த 2016 -17ஆம் வருடம் இந்த நீர்நிலைகளை தூர் வார முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2018 ஆம் வருடம் இந்த பணி தொடங்கப்படுவதாக இருந்தது. இது குறித்து அரசு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளித்த பதிலில் ரூ.36 கோடி செலவில் தூர் வாருவதால் கிடைக்கும் வண்டல் மண் விற்பனை செய்வதால் ரூ. 647 கோடி வருமானம் கிடைக்கும் என தெரிவித்தது. தற்போது அக்டோபர் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் இந்த நீர்நிலைகளை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
கடந்த வருடம் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த நான்கு நீர் நிலைகளிலும் வண்டல் மண் எடுக்கும் பணி தொடங்க வேண்டும் என ஆவணம் தெரிவிக்கிறது. ஆனால் இந்த வருடம் மார்ச் மாதம் தான் அரசு இந்த பணிக்கான ஒப்பந்தத்தை அளித்துள்ளது. தமிழ்ராஜன் என்னும் ஒரு ஒப்பந்ததாரர் இதுவரை இந்த நீர்நிலைகளில் இருந்து 13000 லோடு மண்ணை வாரி உள்ளார்.
தமிழக அரசின் பொதுபணித்துறை அதிகாரிகள் ஒரு நாளைக்கு 250 முதல் 300 லோடுகள் வரை மண் எடுக்க முடியும் என தெரிவித்துளனர். அதன்படி இந்த வேலைகள் மார்ச் மாதம் தொடங்கபட்டிருந்தால் இதுவரை 36000 லோடு மண் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எடுக்கப்பட்டுள்ள்து.
ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி திருநாவுக்கரசு. “லஞ்ச ஊழல் காரணமாக இந்த பணிகள் தாமதமாக நடக்கின்றன. இந்த நான்கு நீர்நிலைகளை தூர் வார ஒரு வருடம் போதுமானது. இந்த மணல் வாரி மணிக்கு ரூ. 1600 வாடகைக்கு கிடைக்கின்றனர். தினமும் 10 மணவ் வாரிகளை அமர்த்தினால் ஒவ்வொரு நாளும் 1000 லோடுகள் வரை எடுக்க முடியும். அதே நேரத்தில் தூர் வாருவதை விட நீர்நிலைகளின் ஆழத்தை அதிகரிப்பது முக்கியமாகும்” என தெரிவித்துள்ளார்
இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அதிகாரி வேலைகள் ஆமை வேகத்தில் நடப்பதால் முழுவதுமாக தூர் வார சுமார் 4 வருடஙக்ள் வரை ஆகும் என தெரிவித்துள்ளார்.
தண்ணீரை தேடும் பணியால் தமிழக அரசு தூர் வாரும் பணியை மறந்து விட்டதாக சென்னை மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.