
புதுடெல்லி: மின்னாற்றலால் இயங்கும் வாகனங்களைப் பதிவுசெய்வதற்கான கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டுமென்ற முன்மொழிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2030ம் ஆண்டில் மின்னாற்றலால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை பெரியளவில் அதிகரிக்கும் திட்டத்தில் அரசு இருக்கும் நிலையில், இந்த முன்மொழிவு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1989ம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது, “மின்னாற்றலால் இயங்கும் வாகனங்களைப் பதிவு செய்யவோ அல்லது பதிவைப் புதுப்பிக்கவோ எந்தக் கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை.
மேலும், பதிவுக்குறியீட்டை ஒதுக்கீடு செய்வதற்கும் கட்டணம் தேவையில்லை. இந்த விதிவிலக்கு அனைத்துவகை எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் (இருசக்கர வாகனங்கள் உட்பட) பொருந்தும்” என்று கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]