மாஸ்கோ
கடந்த 2014 ஆம் வருடம் உக்ரெய்ன் ராணுவத்தினரால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது குற்றச்சாட்டு பதிய உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி அன்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பறந்துக் கொண்டிருந்தது. அதில் 15 விமான ஊழியர்களும் 283 பயணிகளும் பயணம் செய்தனர். அவர்களில் 193 பயணிகள் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டச்சுக்காரரக்ள் ஆவார்கள். அதைத் தவிர சுமார் 12 நாட்டை சேர்ந்த பயணிகள் அதில் பறந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது உக்ரைன் நாட்டு வானில் அந்த விமானம் சுடப் பட்டதால் நடுவானில் விமானம் விபத்துக்குள்ளாகி தூள் தூளாக சிதறியது. விபத்தில் இறந்தவர் உடல்களும் உடைந்த விமான பாகங்களும் உக்ரைன் நாட்டு கிராமத்து நிலத்தில் சிதறி விழுந்தன. இதற்கு அமெரிக்கா முதலில் ரஷ்ய நாட்டை குற்றம் சாட்டியது. அப்போது உக்ரைன் நாட்டு பிரிவினை வாதிகளுக்கு ரஷ்யா அதரவு அளித்து வந்தது.
ஆனால் இந்த விபத்தில் ரஷ்யாவுக்கு பங்கில்லை என ரஷ்யா மறுத்தது. இந்த விபத்து குறிக்க விசாரணையை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், மலேசியா, நெதர்லாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இந்த விசாரணையில் இந்த நிகழ்வை நடத்தியதற்கு காரணமாக இகோர் கிர்கின், செர்ஜி டுபின்ஸ்கி, ஒலெக் புலாடோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கர்செங்கோ என்னும் உக்ரைன் நாட்டவரும் ஆவார்கள் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து நெதர்லாந்து அரசு செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளது. இவர்கள் மீது இதுவரை குற்றச்சாட்டு பதியப்படவில்லை எனவும் விரைவில் பதியப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]