
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும், வரும் ஜுன் 19ம் தேதி, “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற திட்டத்தை விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒட்டி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் மோடி.
தற்போதைய மக்களவைக்கு நிறைய புதுமுகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், “மக்களவையின் முதல் கூட்டத்தொடர் புதிய உற்சாகம் மற்றும் சிந்தனையுடன் துவங்கவுள்ளது” என்று தெரிவித்தார் மோடி.
இதுதொடர்பாக மீடியாக்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி, “தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பயனுள்ள முறையில் மக்களுக்கு சேவையாற்றுகிறார்களா? என்று ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் ஆய்வுசெய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பிரதமர்” என்றார்.
மேலும், அவையை சுமூகமான முறையில் நடத்துவதற்கு, அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவத்தார் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்.
[youtube-feed feed=1]