டாக்கா

டந்த 70 வருடங்களாக காணப்படாத அபூர்வ வகை ஓநாய் விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு முன்பு ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த போது தற்போதைய வங்க தேசம் மற்றும் இந்திய எல்லைகளில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான அபூர்வ விலங்குகள் வசித்து வந்தன.   அவைகளில் வரிகள் கொண்ட கழுதைப் புலி, பனிக்கரடி, ஓநாய் வகைகள் உள்ளிட பல விலங்குகள் உண்டு.  ஆனால் அந்த விலங்குகள் பல தசாம்சங்களாக கண்ணில் தென்படவில்லை.

அவற்றில் ஒன்றான ஒருவகை ஓநாய் வங்க தேசத்தில் கடந்த 1949 ஆம் வருடத்துக்கு பிறகு யார் கண்ணிலும் தென்படாமல் இருந்தது.   அத்தகைய ஒரு ஓநாய் சமீபகாலமாக வயல்வெளிகளில் மேய்ந்துக் கொண்டிருந்த மிருகங்களை தாக்கி உள்ளது.

இதை ஒட்டி அந்த பகுதி விவசாயிகள் இந்த அரிய வகை ஓநாயை பிடிக்க முயன்றுள்ளனர்.   இந்த மாத முற்பகுதியில் விவசாயிகளிடம் அந்த ஓநாய் சிக்கி உள்ளது.   அது அபூர்வ வகை ஓநாய் என்பதை அந்த விவசாயிகள் அறிந்திருக்கவில்லை.   எனவே அதை அடித்துக் கொன்றுள்ளனர்.

இறந்த ஓநாயின் உடலை புகைப்படம் எடுத்துள்ளனர்.  அந்த புகைப்படம் வங்க தேச வன ஆர்வலர்களுக்கு கிடைத்துள்ளது.   அதை ஆராய்ந்த அவர்கள் இறந்து போன ஓநாய் அபூர்வ வகையை சார்ந்தது என கண்டறிந்து வங்கதேச வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர்.   இந்த தகவலை நேற்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.