லண்டன்:

லக கோப்பை தொடரின் 16வது லீக் ஆட்டம் இலங்கை வங்கதேசம் இடையே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி என பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையே இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரில் இன்று நடைபெறவிருந்த ஆட்டம், கனமழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது.

முன்னதாக தென்னாப்பிரிக்கா, வெண்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஹம்ப்ஷேயர் நகரில் நேற்று நடைபெறவிருந்த ஆட்டமும் மழையால் ரத்தான நிலையில், இன்று நடைபெறவிருந்த போட்டியும்  அதே காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது  கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

இலங்கை அணி 3 ஆட்டங்களில் தலா 1 வெற்றி, 1 தோல்வியைப் பெற்றது. மேலும் ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு முடிவின்றி கைவிடப்பட்டது. 3 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் 3 ஆட்டங்களில் ஆடிய வங்கதேசம், 1 வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்தில் உள்ளது.

போட்டியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது 2 அணிகளுக்கு கட்டாயமாகும். இந்நிலையில் டாஸ் கூட வீசப்படாத நிலையில் பலத்த மழை பெய்தது.

நடுவர்கள், இரு அணிகளின் கேப்டன்கள் மைதானம் மற்றும் பிட்சில் சென்று ஆய்வுசெய்தனர். எனினும் மழை தொடர்ந்து பெய்தததாலும், நீர் தேங்கியதாலும், ஓவர்களை குறைத்தும் ஆட்டத்தை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை-வங்கதேசம் இடையிலான ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி: இதைத் தொடர்ந்து இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கை 4 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், வங்கதேசம் 3 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளன.

கைவிடப்பட்ட 3-ஆவது ஆட்டம்: 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் மழை பாதிப்பால் கைவிடப்படும் மூன்றாவது ஆட்டம் இதுவாகும். அதே நேரத்தில் இலங்கைக்கு இது 2-ஆவது ஆட்டமாகும்.