கொல்கத்தா:
பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்ட வங்க சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் உருவசிலையை மமதா திறந்த வைத்த நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. அந்த முயற்சி இங்கே நிறைவேறாது , மே.வங்க மாநிலம் விளையாட்டு பொம்மையல்ல. அதனுடன் விளையாட வேண்டாம் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலின்போது, அமித்ஷா பிரசாரத்தின்போது பா.ஜ., மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கொல்கத்தா கல்லூரி வளாகத்தில் இருந்து ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. அந்த சிலை சரி செய்யப்பட்டு, மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு, நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை முதல்வர் மம்தா பானர்ஜி, பேரணியாக வந்து திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மம்தா, சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே காரணம். மேற்கு வங்கம் விளையாட்டு பொம்மையல்ல. அதனுடன் விளையாட வேண்டாம். மே.வங்கத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்ய முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரியம், மொழி உள்ளது. இது தான் நமது இந்தியா. ஆனால், மாநிலங்களின் நிலை குறித்து பா.ஜ., முடிவு செய்ய முடியாது என எச்சரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் கட்டாயமாக ஹிந்தி படிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அது நடக்கவே நடக்காது, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாரம்பரியமும் மொழி அடையாளமும் உண்டு. அதுதான் நமது இந்தியா. ஆனால் மாநிலங்களின் அடையாளங்களை பண்பாட்டு விழுமியங்களை பாஜகவால் தீர்மானிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.