பெங்களூரு
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான சுதா மூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தான ஆணையத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனர் மனைவியும் அந்த நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவருமான சுதா மூர்த்தி பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிரர். இவர் பெங்களூர் ஐஐஎஸ் சில் மின்சார பொறியியலில் பட்டமேற்படிப்பு முடித்தவர் ஆவார். இவர் டெல்கோ என அழைக்கப்படும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். தற்போது இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனில் தலைவர் பதவியில் உள்ளர்.
கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் பல புத்தகங்கள் எழுதிய சுதா மூர்த்தி பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார். இவரை திருமலை திருப்பதி தேவஸ்தான ஆணைய உறுப்பினராக அப்போதைய ஆந்திர மாநில அரசு கடந்த 2017 ஆம் வருடம் நியமித்தது. அதன் பிறகு அவர் 2018 ஆம் வருடம் மீண்டும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தற்போது சுதா மூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தான ஆணையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மொகன் ரெட்டி தனது மாமாவான ஒய் வி சுப்பாரெட்டியை ஆணைய தலைவராக நியமிக்க உள்ளதால் சுதா மூர்த்தி அதிருப்தி அடைந்து விலகியதாக தகவல்கல் வெளியாகி உள்ளன.
சுப்பா ரெட்டி இந்த தகவலை மறுத்துள்ளார். மேலும் தாம் கிறித்துவர் என்பதால் ஆணைய தலைவராக விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். இது குறித்து சுதா மூர்த்தி, “எனது ராஜினாமாவுக்கு எந்த ஒரு அரசியல் காரணமும் கிடையாது. என்னை முந்தைய அரசு உறுப்பினராக நியமித்தது. ஆனால் தற்போது அரசு மாறி உள்ளது.
எனவே எனக்கு இங்கு அழைப்பு இல்லாத நிலையில் நான் பதவியில் தொடர்வது சரியில்லை என்பதால் விலகினேன். இதற்கும் ஆணைய தலைவர் பதவி நியமனத்துக்கும் தொடர்பில்லை. புதிய அரசு என்னை அழைத்தால் மீண்டும் இணைவேன்” என தெரிவித்துள்ளார்.