புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ.10 லட்சம் பணம் எடுக்கும் நபர்களுக்கு, சுமார் 3% முதல் 5% வரை வரிவிதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கிலும், கருப்புப் பண நடமாட்டத்தை தடுக்கும் வகையிலும் இந்த திட்டம் உத்தேசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிக்கை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சத்திற்கு 3% வரி என்றால் ரூ.30,000 வருகிறது. அதேசமயம் 5% என்றால் ரூ.50,000 வருகிறது. எனவே, ரூ.10000 லட்சத்தை பணமாக பரிவர்த்தனை செய்துவிட்டு, அதற்காக இவ்வளவு பெரிய தொகையை வரியாக கட்டுவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். அவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையைத்தான் விரும்புவார்கள்.
எனவேதான், இத்தகைய ஒரு திட்டத்தைக் கொண்டுவருவதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது என்று கூறுகிறார்கள். சமீபத்தில், NEFT/RRGS ஆகிய முறைகளில் நடைபெறும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ததும் நினைவுகூறத்தக்கது.