திருவனந்தபுரம்:

கேரளாவில்  தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி உள்ள நிலையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கேரளாவில் வழக்கமாக மே இறுதி அல்லது ஜூன் 1ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் கழித்து கடந்த  8ந்தேதிதான் மழை தொடங்கி உள்ளது.  அரபிக்கடலில் உருவாகி உள்ள  குறைந்தழுத்த தாழ்வு நிலையால் கேரளத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. கேரள மற்றும் லட்சத்தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதாக   திருவனந்த புரத்தில் உள்ள இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது அடுத்த  48 மணி நேரத்துக்குள் படிப்படியாக தீவிரம் பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதால், குறிப்பாக, வடக்கு மலப்புரம் பகுதியிலும், கோழிக்கோடு பகுதியிலும் வரும் 12ம் தேதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், , தமிழக மேற்கு மாவட்டங்கள்,   கர்நாடகா, கோவா, அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த 3 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]