லகாபாத்

மித் ஷாவுக்கு கடந்த வருடம் கருப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக்கழக மாணவை நேகா யாதவ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அலகாபாத் பல்கலைக் கழக மாணவி நேகா யாதவ் அரசியலில் ஆர்வம் உள்ளவர். இவர் சமாஜ்வாதி கட்சியின் மாணவர் அணியான சமாஜ்வாதி சத்ர சபாவை சேர்ந்தவர் ஆவார். கடந்த வருடம் அலகாபாத் வந்த அமித் ஷாவுக்கு நேகா கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார். அதை ஒட்டி அவர் மீது வழக்கு உள்ளது. அது தவிர பல்கலக் கழகத்தில் அவர் மீது வேறு சில புகார்களும் உள்ளன.

இந்த கல்வி வருடம் முடிந்ததும் அனைத்து மாணவர்களையும் காலி செய்ய பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வர உள்ள தேர்வுகளுக்கு படிப்பதற்காக தங்களை தங்க அனுமதிக்க வேண்டும் என நேகா மாணவிகள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார். அது பல்கலை விதிகளுக்கு புறம்பானது என நிர்வாகம் கூறியதால் காலி செய்ய மறுத்து போராட்டம் நடத்தி உள்ளார்.

நேகாவை தற்போது பல்கலைக்கழகம் இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அவருக்கு அளிக்கப்பட்ட உத்தரவில் அவர் மீது பல்கலைக்கழக தலைவரும் மாணவர் நல அதிகாரியும் பல குற்றச்சாட்டுக்களை எழுப்பி உள்ளனர். அவர் பல ஒழுங்கு மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுளதாகவும் மாணவர் விடுதிக்கு தாமதமாக செல்லும் போது தடுக்கும் காவலர்களிடம் தகராறு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களை நேகா மறுத்துள்ளார். நேகா, ”நான் மாணவர் நலனுக்காக போராடி வருவதால் என் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. நான் நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று அதன் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளேன். ஆனால் பல்கலை நிர்வாகத்திலுள்ள சிலர் எனது முன்னேற்றத்தை தடுக்க முயல்கின்றனர். நான் இங்குள்ள முறைகேடுகளை எதிர்ப்பதே அதற்கு காரணம் ஆகும்.” என தெரிவித்துள்ளார்.